விமர்சனங்கள்

சுமோ – திரை விமர்சனம் 2.5/5

S. P. ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த்,யோஷினோரி தாஷிரோ, விடிவி கணேஷ், யோகிபாபு, சதிஷ், ‘VTV’ கணேஷ், ‘நிழல்கள்’ ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, சேத்தன், ஸ்ரீநாத், பெசன்ட் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “சுமோ”.

ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் ஐசரி கே கணேஷ் படத்தினை தயாரித்திருக்கிறார்.

பிரவின் கே எல் படத்தொகுப்பு செய்ய, வசனம் மற்றும் திரைக்கதையை உருவாக்கியவர் மிர்ச்சி சிவாவே தான்.

கதைக்குள் சென்று விடலாம்..

கடலில் அலைச் சறுக்கு (Surfing) விளையாட்டு ட்ரெய்னராக இருந்து கொண்டு, அங்கிருக்கும் விடிவி கணேஷின் ரெஸ்டாரண்டை கவனித்தும் வருகிறார் நாயகனான மிர்ச்சி சிவா.

ஒருநாள் கடலோரத்தில் ஜப்பானை சேர்ந்த யோஷினோரி தாஷிரோ என்பவர் கிடக்கிறார். அவரை அங்கிருந்து மீட்டு சிகிச்சை அளிக்கிறார் சிவா. தான் உயிர் பிழைத்தது சிவாவால் தான் என்று அவருடன் நெருங்கி பழகுகிறார்.

அவருக்கு அடிபட்டத்தில் நினைவுகள் மறந்து சிறு குழந்தை போல் நடந்து கொள்கிறார் யோஷினோரி. தொடர்ந்து அவரை தன்னுடனே வைத்து பார்த்தும் வருகிறார் சிவா. ஒருகட்டத்தில், யோஷினோரி ஜப்பானில் மிகப்பெரும் சுமோ மல்யுத்த வீரர் என்பது சிவாவிற்கு தெரிய வருகிறது.

அவரை எப்படியாவது ஜப்பானிற்கு மீண்டும் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார் சிவா. இறுதியில், யோஷினோரியை ஜப்பானிற்கு கொண்டு சேர்த்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக சிவா மிகக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆரம்பத்தில் அவருக்கான கெளண்டர் காமெடிகள் எட்டிப்பார்த்த போது, சுவாரஸ்யமாக சென்ற திரைப்படமானது படம் செல்ல செல்ல சிவா சீரியஸான முகத்தோடு கதையை நகர்த்தியது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்து விட்டது.

யோகிபாபு, விடிவி கணேஷ், நிழல்கள் ரவி, சதிஷ் என பலர் படத்தில் இருந்தும் காமெடி என்ற ஒன்று இல்லாமல் போனது மிகப்பெரும் ஏமாற்றத்தை கொடுத்து விடுகிறது.

விடிவி கணேஷ் பெட்டிக்குள் அவ்வளவு எடை கொண்ட பெரிய பெட்டியை எளிதாக தூக்கிக் கொண்டு போவதும், யோஷினோரிக்கு நினைவு வந்ததா அது எப்படி வந்தது என்பதை சரிவர கூறாமல் விட்டது எதற்காக மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.? யாரிடம் தன் திறமையை நிரூபிக்க வேண்டும்.? நிரூபிக்க வேண்டிய கட்டாயம் என்ன.? அவ்வளவு பெரிய மல்யுத்த வீரர் மீண்டும் தன் நாட்டிற்கு வந்ததை மக்களாவது கொண்டாடியிருக்க வேண்டும் அதுவும் இல்லை என பல கேள்விகள் படத்திற்குள் எழுந்து கொண்டே சென்றது.

படத்தினை எதில் முடிப்பது என்று தெரியாத இயக்குனர் விடிவி கணேஷ் மீது முடிக்க என்ன காரணம்.?

நாயகி ப்ரியா ஆனந்திற்கு பெரிதான ஒரு காட்சி வைக்கப்படாமல் போனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையா இது .?? என்ன ஆச்சி அவருக்கு.??? என்ற கேள்வியை கேட்க வைத்துவிட்டார் நிவாஸ்.

ஒளிப்பதிவு நமக்கு சற்று ஆறுதல்.

கதையிலும் திரைக்கதையிலும் இன்னும் பெரிதாகவே முயற்சி செய்திருக்கலாம்..

இப்படம் எடுக்கப்பட்டு சில வருடங்கள் பெட்டிக்குள் இருந்ததாக ஒரு செய்தி ..

படம் பெட்டிக்குள்ளேயே இருந்திருக்கலாமோ என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டார்கள்…

Facebook Comments

Related Articles

Back to top button