Spotlightவிளையாட்டு

கேப்டனுக்கெல்லாம் கேப்டன் எங்க தல தோனி… சுரேஷ் ரெய்னா புகழாரம்!

தல எப்போதும் தல தான்.. கேப்டன் பதவியில் இல்லை என்றாலும் கேப்டன் செய்ய வேண்டிய பணிகளை செய்து கொண்டுதான் இருப்பார் தோனி என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறும்போது, ’தல தோனி தற்போது கேப்டன் பொறுப்பில் இல்லாவிட்டாலும், களத்தில் விராட் கோலிக்கு அவர் கேப்டனாக செயல்படுகிறார் என்று நான் கருதுகிறேன். பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது, பீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்துவது என இப்போதும் கேப்டனுக்கான பணிகளை தல தோனி செய்து வருகிறார். ” என்று தோனியை புகழாரம் சூட்டியுள்ளார் ரெய்னா.

இந்த தகவலை பிடிஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார் ரெய்னா.

Facebook Comments

Related Articles

Back to top button