Spotlightசினிமா

3 நாட்களில் ₹116 கோடி வசூல்! பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் சூர்யாவின் ‘சீன்’!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘சீன்’ (Scene) திரைப்படம், வெளியான மூன்றே நாட்களில் உலகளவில் ₹116 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா, லால், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.

2D என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் வசூல் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

முதல் மூன்று நாட்களில் ₹116 கோடி வசூல் என்ற தகவல் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த வசூல் தொகைக்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் கிடைக்கவில்லை.

 

Facebook Comments

Related Articles

Back to top button