Spotlightவிளையாட்டு

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஹர்பஜன் கண் கலங்கி எழுதிய கடிதம்!

2019 ஆண்டின் ஐபிஎல் இறுதி போட்டியில் நேற்று சென்னை – மும்பை அணிகள் மோதிக் கொண்டன. இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.

அனைத்து வீரர்களும் பிரியா விடை கொடுத்து அவரவர் மாநிலத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மீது அளவுகடந்த அன்பை வைத்திருக்கும் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங், ரசிகர்களுக்கு தனது கண்கள் கலங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “தமிழ் மக்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், எதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல,அரவணைத்து அன்பு செலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழ செய்தது. மீண்டும் அடுத்த வருடமும் #CSK வுக்கு விளயாடுவேன் என்றே நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன்.” என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button