
வடகிழக்கு பருவமழையால் சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வுமையம் கூறியிருப்பது என்னவென்றால் “தெற்கு அந்தமான் அருகே அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது; அதன் பின்னர் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்கக் கடலை நோக்கி நகரும்.
இதன் காரணமாக வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில் ஆந்திரா மற்றும் ஒடிசாவிற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது; தமிழ்நாட்டிற்கு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மழை குறித்த எச்சரிக்கை ஏதும் இல்லை” – என்று தெரிவித்துள்ளது.
Facebook Comments



