Spotlightசினிமா

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் செய்யும் சேட்டைகளை வைத்து உருவாகியிருக்கும் ‘அய்யய்யோ’

இயக்குனர் யார் கண்ணன் அவர்களின் உதவி இயக்குனரான சிவகணேசன் அவர்கள் ராஜேஸ்வரி பாக்கியராஜ், ஹரிகுமார் ராஜன் ஆகியோருடன் இணைந்து முழுக்க முழுக்க புது முகங்களை கொண்டு இயக்கி இருக்கும் தமிழ் திரைப்படம் தான் ‘அய்யய்யோ’. இதுவரை தமிழில் தொடப்படாத கதைக்களமான ‘கேனிபலிசம்’ பற்றிய படம் இது.

ஒரு திரைப்படம், அதில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் அவர்கள் செய்யும் சேட்டைகளால் அந்தத் திரைப்படம் நிறைந்திருக்கும் தானே, அப்படிப்பட்ட பல சேட்டைகளை கொண்ட திரைப்படம் ‘அய்யய்யோ’. இதில் வரும் மனநல காப்பகத்தில் இருந்து தப்பிக்க பிளான் செய்யும் காமெடி, வலிப்புக்கு சாவி கொடுக்கும் காமெடி, கம்பவுண்டரிடமிருந்து மனநலம் பாதித்தவர்கள் சாவியை திருடும் காமெடிகள் நம்மை முதல் பகுதியில் சிரிக்க வைக்கின்றன.

மனநல காப்பகத்தில் இருந்து வில்லன் மனநலம் பாதித்தவர்களை தப்பிக்க வைக்க கூறப்படும் காரணம் பகீர் ரகம். முன்பே சொன்னதைப் போல இந்த திரைப்படத்தின் இரண்டாம் பகுதி கேனிபலிசத்தை சுற்றி பின்னப்பட்டுள்ளது. கேனிபலிசம் என்றால் ஒரு இனம் தான் சார்ந்த அதே இனத்தை உண்பது ஆகும். அந்த வகையில், சில கொலைகளும், இன்னும் பல குடலைப் புரட்டும் காட்சிகளும் படத்தின் இரண்டாம் பகுதியை ஆக்கிரமித்து இருக்கின்றன.

இந்தத் திரைப்படம் ‘டார்க் காமெடி திரில்லர்’ வகையை சார்ந்தது ஆகும். மார்ச் ஒன்றில் தமிழகத்தில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், தமிழக கேரள எல்லை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

சிவகணேசன் மற்றும் ஹரிகுமார் ராஜன், ராஜேஸ்வரி பாக்யராஜ் ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளனர்.

முக்கிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ், சிவசுப்ரமணிய தீபக், ரஷீத், பிலிப்போஸ், நந்தாகிஷோர், சாஜி, “தொட்றா குமார்” ஆகியோர் நடித்துள்ளனர்.

“டார்க் ஹால் விஷூவல் ட்ரீட்” மற்றும் “லியோ ஜெயிண்ட் மூவிஸ்” ஆகிய நிறுவனங்களின் சார்பாக திருமதி.க.ரத்தினம் மற்றும் அன்சல்னா ஆசாத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இசை: சரண் பிரகாஷ்,சாண்டி சாண்டெல்லோ மற்றும் ராம் கோகுல் ராம்

பாடல்கள்: நிகரன்

எடிட்டிங்: ஜெரால்டு பெஸ்டெஸ்

ஒளிப்பதிவு: ஹரி குமார் ராஜன் மற்றும் ஜெ.நவீன் குமார்

Facebook Comments

Related Articles

Back to top button