Spotlightசினிமா

மீண்டும் துல்கர் சல்மானோடு ரக்‌ஷன்… அடிக்குது பாரு ஜாக்பாட்!

துல்கர் சல்மான் மற்றும் ரக்‌ஷன் இருவரும் இணைந்து நடித்து வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில்,இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனரான கார்த்திகேயன் வேலப்பன் இயக்கத்தில் துல்கர் சல்மான் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திலும் ரக்‌ஷன் நடிக்கவிருக்கிறாராம்.

மேலும் இந்த படத்தில் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவிருக்கிறாராம். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். ஜீ ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்திருக்கும் ரக்‌ஷனுக்கு முதல் படமே சூப்பர் டூப்பர் மீண்டும் அதே ஹீரோவோடு நடிக்கவிருக்கிறார் என்பது அவருக்கான ஜாக்பாட் என்று தான் கூற வேண்டும்.

dulqar salman, rakshan, gv prakashkumar, kalyani

Facebook Comments

Related Articles

Back to top button