
சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S.மோகன் தயாரித்துள்ள திரைப்படம் “மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ்”
இயக்குநர் சரண் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிக்பாஸ் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார். புதுமுகம் நாயகியாக காவ்யா தப்பார் நடித்துள்ளார். நாசர், ராதிகா சரத்குமார், ரோகிணி முதலான பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்ய, கே வி குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். A S லக்ஷ்மி நாராயணன் ஒலியமைப்பு செய்துள்ளார்.
திரைமுன்னொட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில்…
படத்தில் நடித்துள்ள ராதிகா சரத்குமார் அவர்களுக்கு நடிகவேள் செல்வி எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சரத்குமார், இயக்குநர் சரண், ஆர் கே செல்வமணி, நாசர், தயாரிப்பாளர் AL அழகப்பன், தனஞ்செயன், ரோகிணி, கே ராஜன், ஆர் வி உதயகுமார் ஆகியோருடன் படக்குழு மொத்தமும் மேடையேறி அவருக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினர்.
இதுகுறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, ‘என்னை விழாவுக்கு அழைத்த போது இந்த அளவு கொண்டாடிவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. என் அப்பாவின் நினைவும் போற்றப்படுவதில் மகிழ்ச்சி. நான் முதன் முதலில் பாரதிராஜா படத்தில் நடித்த போது என் தந்தை ஆச்சர்யப்பட்டார். நான் சினிமாவில் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தவள்.
முதன் முதலாக நடிக்கும் போது மேக்கப்பை தொட்டு என் தொழில் உன்னிடம் இருக்கட்டும் என என்னை ஆசிர்வதித்தார். அவரது ஆசிர்வாதம் தான் என்னை இந்த இடத்தில் சேர்த்திருக்கிறது. இந்தப்படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்தப்படத்தில் என் கேரக்டர் என் அப்பாவின் சாயல்கொண்டது.
அது தான் இந்தப்பட்டம் எல்லாம் கொடுப்பதை சரணுக்கு ஞாபகப்படுத்யியிருக்கும் என நினைக்கிறேன். எதுவானலும் எனக்கு இப்பட்டம் அளித்ததற்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.’ என்றார்.





