
எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க உருவாகி வருகிறது ‘மிஸ்டர் லோக்கல்”. இப்படத்தினை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக ஒரே நேரத்தில் இரண்டு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்திற்கு ஒரு படமும், சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ் கே ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ‘கோலமாவு கோகிலா’ புகழ் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஒரு படம் என இரண்டு படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்கவிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
இப்படப்பிடிப்பினை மே இறுதி அல்லது ஜுன் மாதத்தில் துவங்க திட்டமிட்டுள்ளாராம் சிவகார்த்திகேயன்.
Facebook Comments





