
தமிழ் சினிமாவில் முன்னொரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பல முன்னனி கதாநாயகிகள் சீரியல் பக்கம் திரும்பி, தனக்கென்று சீரியல் ரசிகர்களின் அபிமானத்தை பெற ஆரம்பித்தனர்.
அந்த வரிசையில், ராதிகா, நளினி, அம்பிகா, குஷ்பு, தேவயாணி என பலரும் டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளனர்.
சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை பார்வையாளர்களை ஈர்ப்பதில் அதன் சீரியல்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றான அன்பே வா எனும் தொடர் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதோடு, அன்பே வா சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வருவதால் டி.ஆர்.பி-யிலும் பார்வையாளர்களை பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் அன்பே வா சீரியலில் தமிழ் சினிமா உலகின் 80-90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மூத்த நடிகை அம்பிகா என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அன்பே வா படக்குழுவினருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
மூத்த நடிகை அம்பிகாவின் வரவால் அன்பே வா சீரியல் மேலும் ரசிகர்களிடம் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





