Spotlightசினிமா

ஒரே படத்தில் ஓஹோ வாழ்க்கை… சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா!

டந்த வருடம் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற படம்தான் ’கீதா கோவிந்தம்’. இப்படத்தில் நாயகியாக நடித்தவர் ராஷ்மிகா.

இப்படத்திற்கு பிறகு தெலுங்கு மற்றும் தமிழக ரசிகர்களிடையே மனம் கவர்ந்த நாயகியாக மாறிவிட்டார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் சரிவர போகவில்லை.

இந்நிலையில், கார்த்தியோடு தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படம் அவருக்கு மிகப்பெரும் ப்ரேக் கொடுக்கும் என நம்புகிறார்.

அதற்குள், அடுத்த படத்தில் தனது சம்பளத்தை 80 லட்சமாக உயர்த்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ராஷ்மிகா.

இது தயாரிப்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு படம் நல்லா ஓடினாலே போதும் ஹீரோ, ஹீரோயின்களுக்கு ………….. சரி விடுங்க நாம எதுக்கு அத சொல்லிகிட்டு!

Facebook Comments

Related Articles

Back to top button