
தன்னுடையை அனுமதி பெறாமல் புகைப்படத்தையும் வசனங்களையும் பயன்படுத்திய சிக்ஸர் படத்தின் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகர் கவுண்டமனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள சிக்ஸர் படத்தை அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ளார் . இப்படத்தில் மாலைக்கண் நோயால் அவதிப்படும் கதாநாயகன் வைபவ், அதனால் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறார் என்பதை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சின்னதம்பி படத்தில் நடித்த காட்சிகளை போல், இப்படத்தின் காட்சியும் இதில் அமைந்துள்ளது. மேலும், என்னை இழிவுப்படுத்தும் காட்சிகளும் இதில் அமையப்பெற்றுள்ளது என கவுண்டமனி தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடையை அனுமதி பெறாமல் புகைப்படத்தையும் வசனங்களையும் பயன்படுத்திய சிக்ஸர் படத்தின் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதனால், இன்று படம் வெளிவருவதில் சிக்கல் நீடித்து வருகிறது.





