ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய திரைப்படம்‘கொரில்லா ’. இந்த படத்தில் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் ராதாரவி நடிக்கிறார்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசும் போது,‘இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன் நடிகர்கள் இணைந்து நடிக்கும் இந்த கொரில்லா படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று முடிவடைந்தது.
இதன் இறுதி கட்ட படபிடிப்பிற்காக நூற்றுக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களின் உழைப்பில் சென்னையின் புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த அரங்கத்தில் கடும் கோடையையும் பொருட்படுத்தாமல் நடிகர்கள் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் டத்தோ ராதாரவி ஆகியோருடன் ஆயிரம் துணை நடிகர் நடிகைகள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
நடிகர் ராதாரவி அவர்களின் வழிகாட்டல் படக்குழுவினருக்கு பேருதவியாக அமைந்திருக்கிறது. இந்த படபிடிப்பு நடைபெற்று முடிந்தவுடன் ‘கொரில்லா ’ படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்படும். ’ என்றார்.