Spotlightசினிமா

பெண்களே…பிக் பாஸ் முகேனை சந்திக்க வேண்டுமா.?? அப்போ மதுரைக்கு வாங்க!

துரையில் ஜெய மீனாட்சி நிறுவனம் பெண்களுக்காக பிரத்யேகமாக 2000 பெண்களுக்கு மெஹந்தி இடும் போட்டி நடைபெற உள்ளது, இந்த நிகழ்ச்சியின் நுழைவு கட்டணமாக ரூ 500-ஐ ( மெஹந்தி இடுபவர், மெஹந்தி இட்டு கொள்பவர் என இருவருக்கும் சேர்த்து ) செலுத்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

மெஹந்தி இடும் போட்டி மட்டுமில்லாமல் தன்னம்பிக்கை வளர்க்க, தற்காப்பு சம்பந்தமான கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் வெற்றியாளரான முகேன் கலந்து கொள்கிறார். மேலும் விக்ரமின் சகோதரியின் மகனும் பப்ஜி படத்தின் நாயகனுமான அர்ஜூமனும் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 11-ம் தேதி மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button