
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகிபாபு, வினய் நடிப்பில் நேற்று வெளியானது “டாக்டர்”. இப்படத்திற்கு பாஸிடிவான விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்த நிலையில், இன்றும் திரையரங்குகள் ரசிகர்களாலும், பொதுமக்களாலும் நிரம்பி வழிந்து வருகிறது.
பல திரையரங்குகளில் இன்று “ஹவுஸ் ஃபுல்” காட்சிகளாக டாக்டர் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைக் கண்ட திரையுலகம் ஆனந்த கண்ணீரில் தான் மிதந்து கொண்டிருக்கிறது.
ஏனென்றால், கொரோனாவின் இரண்டாவது அலைத் தாக்கத்தில் மிகவும் சோர்வடைந்து போன சினிமா மீண்டும் சிறிதாக துளிர்வடைய ஆரம்பித்திருக்கிறது.
இந்நிலையில், தரமான காமெடி எண்டர்டெயினராக உருவாகியிருக்கும் “டாக்டர்” படத்தால் மீண்டும் மக்கள் திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக வரத் துவங்கியுள்ளதால், சினிமா உலகம் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளது.
தொடர்ந்து பல திரையரங்குகள், ”டாக்டர்” பட்காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இப்படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். கே ஜே ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





