Spotlightதமிழ்நாடு

அழுக்கு உடையுடன் கார் வாங்க வந்த நபர்.. நட்புக்காக படம் போல் நடந்த உண்மை சம்பவம்!!

ருவரின் தோற்றத்தை வைத்து அவர்களின் திறமையையோ செல்வாக்கையோ மதிப்பிட முடியாது என்பதற்கு ஒரு சான்றாக நிகழ்ந்துள்ளது இச்சம்பவம்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த நட்புக்காக திரைப்படக் காட்சியை நினைவூட்டும் வகையில் கார் வாங்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் இராமன பாள்யா பகுதியில் வசிக்கும் கெம்பேகவுடா என்ற இளைஞன் கார் வாங்க திட்டமிட்டார். அதற்காக, தும்கூரில் உள்ள மஹிந்திரா கார் ஷோரூமுக்கு சென்று கார்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் அணிந்திருந்த அழுக்கு ஆடைகளைப் பார்த்த பணியாளர்கள் அவரை அவமதித்துள்ளனர். 10 ரூபாய் பெறாத ஆடை அணிந்துள்ள நீ கார் வாங்க போறியா.? என்று அங்குள்ள பணியாளர்கள் ஏளனமாய் சிரித்து அவரை அவமானப்படுத்தியுள்ளனர்.

இதனால் கோபம் அடைந்தன் கெம்பேகவுடா, இன்னும் 1 மணி நேரத்தில் பத்து லட்சம் ரூபாய் பணத்தோடு வருகிறேன். காரை உடனே டெலிவரி கொடுப்பீர்களா.? என்று கேட்டுள்ளார் கெம்பேகவுடா. முதலில் பணம் கொண்டு வா என்று கூறி மீண்டும் ஏளனமாய் சிரித்துள்ளனர் பணியாளர்கள்.

அங்கிருந்து சென்ற அவர், சரியாக ஒரு மணி நேரத்தில் பத்து லட்சம் ரூபாயோடு ஷோரூமிற்கு வந்து அங்கிருந்த பணியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் கெம்பேகவுடா.

இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button