Spotlightசினிமா

விடுதலை படத்தின் படப்பிடிப்பை முடித்த வெற்றிமாறன்!

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் ‘விடுதலை’ பார்ட் 1 & 2 வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வந்தது. விஜய்சேதுபதி, சூரி மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்து வருகிறார்.

தற்போது ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ‘விடுதலை’ பார்ட் 1 படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழங்குகிறது. படத்தின் பாடல்கள், ட்ரைய்லர் மற்றும் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button