Spotlightதமிழ்நாடு

துணிந்து களம் இறங்கும் கமல்; இன்று பிரசாரம் செல்கிறார்!

ந்து தீவிரவாதம் என்ற சர்ச்சை பேச்சு காரணமாக கடந்த 2 நாட்களாக தனது பிரசாரத்தை கமல் ரத்து செய்திருந்தார். பாஜக முதல் அதிமுக தலைவர்கள் வரை அனைவரும் தங்களது எதிர்ப்பை காட்டினர்.

கடந்த இரண்டு நாட்களாக தனது பிரசாரத்தை ரத்து செய்திருந்த கமல், பல இன்னல்களுக்கும் நடுவில் இன்று பிரசாரம் செய்கிறார்

கொடைக்கானலில் இருந்து புறப்பட்ட கமல், திருப்பரங்குன்றத்தில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

திருப்பரங்குன்றம் – தோப்பூர், பெரியார் நகர், சமநாதம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் கமல் பிரசாரம் செய்து தனது வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button