Spotlightசினிமா

செப்டம்பர் மாதத்தில் வெளிவருகிறது ஆர்யாவின் ‘மகாமுனி’!

மெளனகுரு படத்தின் இயக்குனரான சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்க உருவாகி வருகிறது ‘மகாமுனி’. இப்படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் எஸ் எஸ் தமன்.

வரும் செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி வரும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button