Spotlightசினிமா

‘இந்த நேரத்துல நம்ம படத்துக்கு ப்ரொமோஷன் தேட வேண்டாம்; தல அஜித் சொன்னது!

ஹச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உருவாகி வருகிறது ‘வலிமை’. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் படத்தின் அடுத்த கட்ட வேலைகள் கொரோனாவால் தடைபட்டு கிடக்கிறது.

இந்தநிலையில், இப்படத்தினைப் பற்றிய செய்தி இன்று வரும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏனெனில் உழைப்பாளர் தினமான இன்று அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ரசிகர்கள் பல நாட்களாக சமூக வலைதளங்களில் இவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ரசிகர்கள் ‘வலிமை’ படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட் வெளியாகும் என காத்திருந்தனர். ஆனால் வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதுவரை தனித்திருப்போம், நம் நலம் காப்போம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவின் பாதிப்பால் மக்கள் சிரமப்படும் இவ்வேளையில் நமது வலிமை படத்திற்கு எந்தவிதமான விளம்பரமோ ப்ரொமோஷனோ செய்ய வேண்டாம் என அஜித் கூறியிருக்கிறாராம்.

Facebook Comments

Related Articles

Back to top button