
கெஜராஜ், அஸ்ராப், தினேஷ் குமரன், சாய் கார்த்தி, கெளரி நந்தா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் தினேஷ் குமரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் மால். இப்படமானது, ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சிலைகடத்தலை மையப்படுத்தி வரிசையாக படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில், இந்த மால் கதையும் சிலை கடத்தலை மையப்படுத்தி தான் உருவாகியிருக்கிறது.
ஒரு மிகப்பெரும் திருட்டுக் கும்பல் ஒன்று சுமார் 100 கோடி மதிப்புள்ள சோழர் சிலை ஒன்றை திருடி விடுகிறது. போலீஸார் அந்த கும்பலையும் சிலையையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனால், திருடிய கும்பல் என்ன செய்வது என்று தெரியாமல் வேறு ஒரு கும்பலிடம் கொடுத்து கைமாற்றி தரும்படி கேட்கிறது. அந்த டீமும் ஓகே சொல்ல. சிலை கை மாறுகிறது.
சிலை மாற்றும் வேலையில், வேறு ஒரு கும்பல் உள்ளே புகுந்து சிலையை கடத்தி விடுகிறது. ஒரு பக்கம் போலீஸ் அதிகாரி கெஜராஜா அந்த சிலையை தனக்கு கைப்பற்றி விட நினைக்கிறார். இப்படியாக, அந்த சிலையை பலர் அடைய நினைக்கிறார்கள்.
கடைசியாக அந்த சிலை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.
வழக்கமான சிலை கடத்தல் கதை தானே என்று கடந்து செல்ல முடியாத அளவிற்கு படத்திற்குள் நம்மை ஈர்த்து விடுகிறார் இயக்குனர். காட்சிகள் ஒவ்வொன்றையும் கச்சிதமாக நகர்த்தி சென்றிருக்கிறார்.
நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கானதை பெர்பெக்டாக செய்து முடித்திருக்கிறார்கள். அதிலும் சாய் கார்த்திக் பெர்பெக்ட்
சிலையை யார் கடத்தியிருப்பார் என்று அடுத்துடுத்து யூகித்துக் கொண்டிருக்கும்படியாகவே காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு மிகவும் பக்க பலமாகவே கை கொடுத்திருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் ஒரே இடத்தில் இணைய வைத்து கதையை முடித்தது அப்ளாஷ்.
மொத்தத்தில்,
மால் – மஸ்ட் வாட்ச் மூவி…





