
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது அவருடன் ஹேமந்த் என்பவர் இருந்தார் என்பதும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் போலீசார் விசாரணையில் ஏற்கனவே தாங்கள் இருவருக்கும் பதிவு திருமணம் செய்துவிட்டதாக விசாரணையில் ஹேமந்த் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் சித்ராவின் உடல் இன்று காலை 10 மணிக்கு பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாகவும் இந்தப் பிரேத பரிசோதனையின் முடிவில் சித்ராவின் மரணத்தின் மர்மங்கள் விலகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்கொலை, கொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய மூன்று கோணங்களில் தற்போது போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் இந்த பிரேத பரிசோதனை அறிக்கை விசாரணைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
பிரேதம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு வந்த ஆர் டி ஓ நேற்றே தனது விசாரணையை
துவங்கிவிட்டார்.
மேலும், சித்ராவின் தந்தை தனது மகளின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை விலக்குமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் சித்ராவின் செல்போன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த செல்போன் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.





