Spotlightஇந்தியாதமிழ்நாடு

விறுவிறுப்படையும் வாக்கு எண்ணிக்கை… தமிழகத்தில் 33 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை!

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 33 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதேபோல் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அடுத்தகட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தைப்பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதன் விவரம்

மக்களவை தேர்தல்
* நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை
* தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை
* ஸ்ரீபெரும்புதூரில் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை
* திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசு முன்னிலை
* நெல்லை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் முன்னிலை
* நாமக்கல் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி கொ.ம.
* பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் முன்னிலை
* சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை
* தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் முன்னிலை
* அரக்கோணம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலை
* திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை முன்னிலை
* மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை
* தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலை
* திருப்பூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் முன்னிலை
* புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை
* மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் முன்னிலை
* கடலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ரமேஷ் முன்னிலை
* கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் ஏ.செல்வகுமார் முன்னிலை
* ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலை

சட்டமன்ற தேர்தல்
* திருவாரூர், பெரம்பூர், ஓசூர், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிகளில் திமுக முன்னிலை

* சாத்தூர், ஆண்டிப்பட்டி, மானாமதுரை சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக முன்னிலை

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

Facebook Comments

Related Articles

Back to top button