Spotlightசினிமா

ரயில் வண்டியில் ஸ்டிக்கர்ஸ் ஒட்டிய பிளாக் ஷீப்

பிளாக் ஷீப் நிறுவனம் அதன் அடுத்த கட்டமாக பிளாக் ஷீப் டிவி மூலம் செயற்கைக்கோள் தொலைக்காட்சி துறையில் கால் தடம் பதிக்க உள்ளது. வைகைப்புயல் வடிவேலுதான் பிளாக் ஷீப் தொலைக்காட்சியின் பிரதிநிதியாக (அம்பாசிடராக) உள்ளார்.

பிளாக் ஷீப் நிறுவனம் முதல்கட்டமாக அதற்கான விளம்பர நிகழ்வை இன்று ஆரம்பித்திருக்கிறது. சென்னை முதல் கோயமுத்தூர் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி முழுவதும் பிளாக் ஷீப் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கும் நிகழ்ச்சிகள் குறித்த ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த ரயிலை 90களில் தொலைக்காட்சியின் தொகுப்பாளர்கள் அர்ச்சனா ,விஜய் ஆதிராஜ் , விஜய்சாரதி, டாப் 10 சுரேஷ், ஜேம்ஸ் வசந்தன், மெட்ரோ ப்ரியா மற்றும் பலர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதியம் 02:30 மணிக்கு நடைபெற்றது

Facebook Comments

Related Articles

Back to top button