
இயக்குனர் டி கே இயக்கத்தில் வைபவ், சோனம் பாஜ்வா, ஆத்மிகா, வரலக்ஷ்மி சரத்குமார், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய் என நட்சத்திர பட்டாளங்கள் பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “காட்டேரி”.
யாமிருக்க பயமேன் படத்தின் வெற்றியை இயக்குனர் இப்படத்தின் வாயிலாக தக்க வைத்துக் கொண்டாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைப்படி,
புதிதாக திருமணம் முடிந்த வைபவ் மற்றும் சோனம் பாஜ்வா, தனது நண்பர்களோடு புதையல் தேடி ஒரு கிராமத்திற்கு செல்கின்றனர்.
போன இடத்தில், அக்கிராமமே மயானமாக காட்சியளிக்கிறது. அக்கிராமத்தில் அனைவரும் ஆவியாக சுற்றித் திரிகின்றனர்.
எதற்காக ஒரு கிராமமே அழிக்கப்பட்டது.? அக்கிராமத்தில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் கேரக்டர்கள் பல இருந்தாலும் பெரிதான மிரட்டல் காட்சிகளோ கதையின் மீது பெரிதான ஈர்ப்போ கொடுக்கவில்லை.
படத்தில் முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதால், முக சுழிப்போடு தான் காட்சிகளை கடக்க வேண்டிய சூழல். காட்டேரி என்ற ஒன்று வித்தியாசப்பட வைப்பதால், அக்காட்சிகளை மட்டுமே ரசிக்கும்படியாக அமைந்திருந்தது.
அதிலும், கருணாகரன் மற்றும் ரவி மரியாவின் காட்சிகள் ஒன்று கூட ரசிக்க முடியாமல் போனது படத்திற்கு பெரிய ட்ரா பேக் தான்.
ப்ளா பேக் காட்சியில் வரலட்சுமி, ஜான் விஜய், மைம் கோபி இவர்களின் காட்சிகள் ரசிக்க வைத்தன.
பி.எஸ். வினோத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
எஸ்.என். பிரசாத்தின் இசையின் பின்னணி இசை ஓகே ரகம் தான்.
யாமிருக்க பயமேன் கொடுத்த வெற்றியை இயக்குனர் இப்படத்தில் தவறவிட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பயமுறுத்தும் காட்சிகள் ஏதும் பெரிதாக இல்லாதது படத்திற்கு பெரும் பின்னடைவு தான்.
காட்டேரி – தலைவலி.