Spotlightசினிமா

விக்ரம் போல் அர்ஜுமன்…. PUBG விளையாடும் நாயகன்!

யக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் படம் தான் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG). இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் இதன் இறுதிகட்ட பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.,

புதுமுகம் அர்ஜுமன் கதாநாயகனாகவும் ஐஸ்வர்யா தத்தா நாயகியாகவும் நடித்து வருகிறார். அர்ஜுமன் நடிகர் விக்ரமின் உடன் பிறந்த சகோதரியின் மகன் ஆவார்.

இவர்களுடன் பிக்பாஸ் ஜுலி, அனித்ரா, ரித்திகா சரண், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன், கதிர், KPY யோகி என பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதியில் அர்ஜுமனின் பிறந்தநாளை முன்னிட்டு PUBG படத்தில் இவரது 5 விதமான தோற்றங்களை அன்று வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அதில் ஒன்று பெண் வேடம் பொருந்திய தோற்றம் போல் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் கந்தசாமி படத்தில் பெண் வேடம் ஏற்று நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button