Spotlightவிமர்சனங்கள்

ஆதித்ய வர்மா விமர்சனம் 3.25/5

நாயகனாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாயிருக்கும் படம் தான் ‘ஆதித்ய வர்மா’.

தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காக வந்திருக்கிறது இந்த ’ஆதித்ய வர்மா’.

பெங்களூர் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவராக வருகிறார் துருவ் விக்ரம். படிப்பில் நம்பர் ஒன் மாணவராக வரும் துருவ், கோபத்திலும் நம்பர் ஒன்’ஆக இருக்கிறார்.

அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவியாக வந்து சேர்கிறார் நாயகி பனிதா சந்து. இவரை பார்த்ததும் காதலில் விழுகிறார் துருவ்.

பனிதாவும் துருவ் மீது காதல் வயப்படுகிறார். துருவ் விக்ரமின் காதலை பனிதாவின் பெற்றோர் எதிர்க்கின்றனர்.

பனிதாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க, மதுவே மருந்து என எப்பொழுதும் போதையில் சுற்றித்திரிகிறார் துருவ்.

பணிபுரியும் மருத்துவமனைக்கும் போதையிலேயே வரும் துருவ் செய்த அனைத்து ஆப்ரேஷன்களும் சக்சஸ் தான். இருந்தாலும், ஒரு கட்டத்தில் எல்லை மீற மருத்துவமனை நிர்வாகம் துருவ் மீது இந்திய மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கிறது.

அதன் பிறகு என்ன ஆனது..?? துருவ் காதலின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்தாரா..?? நாயகி பனிதா என்ன ஆனார் என்பதே படத்தின் மீதிக் கதை….

நாயகன் துருவ் விக்ரம், தனது முதல் படம் என்பதே தெரியாத அளவிற்கு மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த படத்தையும் தனி ஒருவனாக தனது தோளில் சுமந்து செல்கிறார். ஆக்‌ஷன், காதல், ரொமான்ஸ் என அனைத்திலும் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகிக்கும் துருவ்விற்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே பொருந்தியுள்ளது. காதலில் விழும் காட்சிகளில் ஆரம்பித்து காதல் தோல்வியால் துவண்டு நிற்கும் காட்சி வரையிலும் அதன் கேரக்டராகவே மாறி நிற்கிறார் துருவ் விக்ரம். அதானே, புலிக்கு பிறந்தது பூனையாகுமா..??

நாயகி பனிதா கோலிவுட்டிற்கு நல்ல வரவுதான் என்றாலும், ஆங்காங்கே ஒரு சில காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நன்றாகவே பெர்பார்மன்ஸ் கொடுத்திருக்கலாமே என்று தோன்றியது. மெளனமான கண்களால் இளைஞர்களை கட்டிப் போடுகிறார் பனிதா.
துருவின் நண்பர்கள், துருவின் தந்தை ராஜா, துருவின் அண்ணன், ப்ரியா ஆனந்த் பாட்டியாக நடித்தவர் என அனைவரும் படத்திற்கு சரியான பொருத்தமான நடிகர்கள் தான்.

ரதனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், பின்னனி இசையில் மிரட்டியெடுத்திருக்கிறார். ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். ஒவ்வொரு காட்சிகளையும் மிகவும் ரம்மியமாக, கண்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படத்தின் நீளத்தை இன்னும் சற்று குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

கதையின் மீது சற்று சுவாரஸ்யத்தை இயக்குனர் ஏற்றியிருக்கலாம்.

ஆதித்யா வர்மா – துருவ் விக்ரமிற்காக படத்தை ஒருமுறை கொண்டாடலாம்..

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close