சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு என்ற படம் விரைவில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது என சில தினங்களுக்கு முன் மகிழ்ச்சியான செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து அடுத்த அதிரடியாக சிம்பு நடிக்க அப்படத்தை இயக்கவிருக்கிறார் சுந்தர் சி என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இப்படத்தை ரஜினியின் ’2.0’ படத்தை பிரம்மாணடமாக தயாரித்து வரும் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.
மேலும் இப்படத்தினை வரும் ஜனவரி 2019ல் வெளியிட இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு அதிரடி படங்களை சிம்பு கையில் எடுத்துள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Facebook Comments