SpotlightUncategorizedவிமர்சனங்கள்

ஐங்கரன் – விமர்சனம் 2.5/5

வி அரசு இயக்கத்தில் ஜி வி பிரகாஷ்குமார், மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஆடுகள் நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் “ஐங்கரன்”. படம் எடுத்து சில வருடங்கள் கழித்து இப்படம் வெளியாகி இருப்பதால், படத்தின் மீதான ஈர்ப்பு சற்று குறைந்துவிட்டது. மேலும், ப்ரோமோஷன் பணிகளும் போதுமான அளவு இல்லாதது படத்திற்கு சற்று சறுக்கல் தான்…

கதைப்படி,

சின்ன விஞ்ஞானியான ஜி வி பிரகாஷ், சிறு சிறு மெக்கானிக் தயாரிப்பை கண்டுபிடிப்பவர். தனது தயாரிப்பை அரசு அங்கீகாரத்திற்கு அனுப்பி வைப்பார் ஜீ வி, வழக்கமான அலட்சிய அரசு அதிகாரிகள் அதை நிராகரித்து விடுவார்கள். இப்படியாக செல்லும் ஜி வி பிரகாஷின் வாழ்க்கை. ஜி வி பிரகாஷின் தந்தையாக வருகிறார் ஆடுகளம் நரேன்.

வட இந்தியாவில் இருந்து கொள்ளை அடிக்க தமிழகம் வருகிறது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று… தமிழகத்தில் சில இடங்களில் நகைக்கடைகளில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி, அதில் இரண்டு நகரங்களில் கொள்ளையடித்துவிடுவார்கள்.

இந்த கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது தமிழக காவல்துறை. ஒருகட்டத்தில் கொள்ளையடித்த நகைகளை கொண்டுசெல்ல, ஒரு மோசமான சதிசெயலில் ஈடுபடுகிறது அந்த வட மாநில கும்பல். இவர்களுக்கு உடந்தையாக செயல்படுகிறார் இன்ஸ்பெக்டராக வரும் ஹரீஷ் பெராடி.

இந்த சதிசெயலை ஜி வி பிரகாஷ் எப்படி முறியடித்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஜி வி பிரகாஷ், இப்படத்தில் பெரிதான ஒரு ஆக்டிங்க் பெர்பார்மன்ஸை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். விஞ்ஞானி என்றால் கண்ணாடி அணிய வேண்டும் என்று தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி இருக்கும் போல…

படத்தில் வரும் இரண்டு சண்டைக் காட்சிகள் செம.. ஆனால், இது நம்ம நாயகன் ஜி வி பிரகாஷிற்கு எடுபடாமல் போனது தான் வேதனை. கதை தான் முக்கிய கருவாக சென்று கொண்டிருக்கும் போது, மாஸ் காட்சிகள் தேவையில்லாமல் எட்டிப்பார்த்தது படத்தின் ஓட்டத்தை பெரிதாக பாதித்துவிட்டது.

படத்தின் முதல் பாதியில் இருந்த ஒரு வேகம், இரண்டாம் பாதியில் இல்லாமல் போய்விட்டது. மஹிமா நம்பியார் உடனான காதல் காட்சிகளும் பெரிதான ஒரு ஈர்ப்பை கொடுக்கவில்லை.

மிக முக்கியமான கதையை கையில் எடுத்த இயக்குனர் ரவி அரசு, அதை கொடுக்கும் விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். நகைக்கடையை கொள்ளையடிக்கும் காட்சியை மிகவும் பரபரப்பாக கொண்டு சென்றது கவனிக்க வைத்தது.

ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னனி இசையும் பெரிதாக கவரவில்லை.

ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஆறுதல்.

தாங்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பிற்கு பல வருடங்களாக அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கும் தமிழக விஞ்ஞானிகளான ஒவ்வொருவருக்கும் இப்படம் ஒரு சமர்ப்பணமாகவே இருக்கக் கூடும். ஹீரோயிசம் இல்லா திரைக்கதையாக கொண்டு சென்றிருந்தால் ”ஐங்கரன்” அய்யனாராகவே காட்சியளித்திருப்பார்.

Facebook Comments

Related Articles

Back to top button