
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள் ”வீரமே வாகை சூடும்” வரும் 26ஆம் தேதி திரைக்கு வர தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து “லத்தி” திரைப்படத்தின் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆங்கில புத்தாண்டான இன்று விஷால் தனது அடுத்த படத்தின் டைட்டிலை இன்று வெளியிட்டார். AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.
எனிமி படத்தின் தயாரிப்பாளர் எஸ் வினோத் குமார் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். படத்திற்கு “மார்க் ஆண்டனி” என்று டைட்டில் வைத்துள்ளனர்.
ரஜினி நடித்து மிகப்பெரும் ஹிட் அடித்த “பாட்ஷா” படத்தில் வில்லனாக தோன்றும் ரகுவரன் கதாபாத்திரத்தின் பெயர் மார்க் ஆண்டனி. இந்த கதாபாத்திரம் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது.
ரகுவரனின் இந்த கதாபாத்திரத்தின் பெயரை விஷால் தனது படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்.
மேலும், இப்படம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராக இருக்கிறது.
வரும் பிப்ரவரி மாதம் முதல் இப்படத்தின் பட வேலைகள் துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் கையில் துப்பாக்கியோடு தோன்றுவதால் இதுவும் ஒரு கேங்க்ஸ்டர் படமாக இருக்கும் என்கிறனர் பலர்.
டைட்டில் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிற துவங்கியுள்ளது.
மேலும், இப்படத்தில் எஸ் ஜே சூர்யா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



