
வலிமை படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக இலியானா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கான பேச்சுவார்த்தையும் இலியானாவிடம் நடந்துகொண்டிருக்கிறதாம்.
வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் இரண்டு வேடங்களில் அஜித்குமார் நடிக்கிறார். இப்படத்தில் நடிக்க இலியானாவிடம் பேசப்பட்டு வருகிறதாம்.
ஒரு வேடத்துக்கு யாமி கௌதம் நாயகியாக நடிக்கிறாராம். மற்றொரு வேடத்துக்குத்தான் இலியானாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் இலியானா கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments





