
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிக் கொண்டன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா அணி பேட்டிங் செய்தது.. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கே எல் ராகுல் களமிறங்கினர். ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா பின் அதிரடியில் இறங்கினார்.
இவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் படுவேகம் எடுத்தது. 113 ரன்களில் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் வந்த விராட் கோலியும் அதிரடி காட்டினார். இவர் 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெடுகளை இழந்து 336 ரன்களை எடுத்திருந்தது.
337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தில் ஆடி, இந்திய அணியின் பொறுமையை சோதித்தது.
இடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 40 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் வரை மட்டுமே எடுத்தது.
இறுதியாக இந்தியா அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.





