Spotlightசினிமா

9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘மரகத நாணயம்’ மேஜிக்! இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ஃபேண்டஸி காமெடி திரைப்படமான ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய ARK சரவனே இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆதி, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், நிக்கி கல்ராணி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், டேனியல் ஆனி போப், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தில் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை, சாகசம், ஆக்‌ஷன் ஆகியவற்றுடன் பல புதிய ஆச்சரியங்களும் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். குறிப்பாக நிக்கி கல்ராணியின் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உருவாகியுள்ள ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Facebook Comments

Related Articles

Back to top button