
அறிமுக இயக்குனர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபி சத்யராஜ், கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பா, முருகதாஸ், திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, சாருமிஷா, நிரஞ்சனா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் டென் ஹவர்ஸ்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஜெய் கார்த்திக். இசையமைத்திருக்கிறார் கே எஸ் சுந்தரமூர்த்தி.
கதைக்குள் சென்று விடலாம்..
தனியா பேருந்து ஒன்று இரவு நேர பயணத்தை சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு தொடங்குகிறது. பேருந்தில் ஒரு பெண் சித்தரவதை செய்யப்படுகிறார் என்று போலீஸ் நிலையத்திற்கு ஒரு போன் வருகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த ஏரியாவில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி, குறிப்பிட்ட அந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்கிறார். அப்போது அங்கு ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பதை காண்கிறார்.
அதனைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையை துவங்குகிறார் சிபிராஜ்.
இறுதியில் கொலையை செய்தது யார் என்பதை சிபிராஜ் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
அளவு எடுத்தாற் போல் தாடி, கழுத்தில் சாமி மாலை, நெற்றியில் விபூதி பட்டை, ஆறடி உயரம் என இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தை போகிற போக்கில் நடித்துவிட்டுச் சென்றது போன்று மிகவும் இயல்பாக நடித்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் சிபிராஜ்.
வசன உச்சரிப்பில் ஆரம்பித்து அனைத்தையும் மிக கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் சிபிராஜ்.
மேலும், படத்தில் நடித்த கஜராஜ், ஜீவா ரவி, அய்யப்பா, முருகதாஸ், திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கிறார்கள்.
நெடுஞ்சாலையை காட்சிப்படுத்திய விதம், பேருந்தை காட்சிப்படுத்திய விதம் என ஒளிப்பதிவில் நன்றாகவே கவனம் ஈர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
கே எஸ் சுந்தர மூர்த்தியின் பின்னணி இசை மிரட்டல் தான்.
வார விடுமுறையில் பரபரப்பான த்ரில்லர் படத்தை காண, டென் ஹவர்ஸ் படத்தை ஒருமுறை கண்டிப்பாக விசிட் அடிக்கலாம்.,





