
இயக்கம்: ஜெயவேல் முருகன்
நடிகர்கள்: ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த், கேப்ரில்லா, ஹரிபிரியா, ஷங்கர் நாக் விஜயன், ப்ரியதர்ஷன், ஜீவா ரவி, மகேஷ்வரி
ஒளிப்பதிவு: ஸ்ரீராம சந்தோஷ்
இசை: போபோ ஷாஷி
தயாரிப்பு: கார்த்திக் ஸ்ரீதரன்
கதைப்படி,
வட சென்னையை மையப்படுத்தி கதை நகர்கிறது. வீட்டிற்கு தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு தரப்பினர்களிடையே போட்டி நிலவுகிறது. ராதாரவி மற்றும் சரண்ராஜ் இருவரும் தான் அந்த ஏரியாவில் தண்ணீர் கேன் போடும் பிசினஸ் செய்து வருகிறார்கள்.
இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. இவர்களுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் ஏரியா பிரிப்பதில் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர்.
இதில், ராதாரவியிடம் துஷ்யந்தும் சரண்ராஜிடம் ஷங்கர் நாக் விஜயனும் வேலை பார்க்கின்றனர்.
இந்நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவர் தண்ணீர் கேன் பிசினஸில் பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார். இதனால், இரு தரப்பினரிடையே இருந்து வந்த மோதல் பெரும் பகையாக மாறுகிறது.
இந்த பகையால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஜோடிகளாக வரும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் கேப்ரில்லா, பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா இந்த இரு ஜோடிகளும் கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்து கதையின் நாயகர்களாக தெரிந்திருக்கிறார்கள்.
இருந்தாலும் ஆங்காங்கே தென்பட்ட மாஸ் காட்சிகளை தவிர்த்திருந்திருக்கலாம். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா, கீர்த்திவாசன், கார்த்தி, கௌஷிக் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் தங்களது பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.
ராதாரவி மற்றும் சரண்ராஜ் இரு பில்லர்களாக படத்தினை தாங்கி நின்றிருக்கின்றனர். இருந்தாலும் சரண்ராஜ் திக்கி பேசுவதை தவிர்த்திருந்திருக்கலாம்.
இசையமைப்பாளர் போபோ சசியின் பாடல்கள் ரசிக்க வைத்திருக்கின்றன. பின்னணி இசையில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். சரியான வெளிச்சத்தை கொடுத்து காட்சிகளை நன்றாகவே காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
தண்ணீர் கேன் பிசினஸில் தொடங்கி கதை வழக்கமான அடிதடி, சண்டை, சதி என கதை வேறு ஒரு பாதையை நோக்கி பயணப்பட்டு விட்டது.
க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி வித்தியாசமான முயற்சி. மிரட்டலாக கொடுத்திருக்கின்றனர்.
மகேஸ்வரியின் காட்சியை சிங்கிள் ஷார்ட் ஆக கொண்டு சென்றதில் இயக்குனரின் திறமை நன்றாகவே தெரிகிறது.
மொத்தத்தில்,
வருணன் – வாழ்த்துகள்.





