Spotlightசினிமா

புது பங்களாவிற்கு குடியேறும் அஜித்!

விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விட்ட நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கிறது. அஜித் தற்போது தனது குடும்பத்தினருடன் திருவான்மியூர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் புதிய பங்களா ஒன்றை கட்ட முடிவு எடுத்தார் அஜீத். ஈசிஆரில் தனது கனவு பங்களாவை பிரம்மாண்டமாக கட்டும் முயற்சியில் இறங்கினார். இதில் மினி டிஜிட்டல் திரையரங்கு, ஏரோ மாடலிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் உருவாகி வருகின்றன.

மேலும், வடிவமைக்கப்பட்ட விசாலமான அறை தனது குழந்தைகள் விளையாட டென்னிஸ் தளம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல நவீன வசதிகள் உள்ளடக்கிய பங்களாவாக உருவாகி வருகிறது. விரைவில் கிரகபிரவேசம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button