
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க விரைவில் உருவாக இருக்கிறது ‘வாடிவாசல்’.
இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவிருக்கிறார். இசையமைக்கவிருக்கிறார் ஜி வி பிரகாஷ்குமார்.
வாடிவாசல் பற்றி அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஜி வி பிரகாஷ்.
அதில்,
’இது எனக்கு 75வது படம், இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இசை வேலைகளை துவங்கி விட்டேன். இதன் இசை மிகவும் தனித்துவமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
அசுரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் வெற்றி மாறன், ஜி வி பிரகாஷ், கலைப்புலி எஸ் தாணு இணையும் படமாகும் இதுவாகும். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை வாடிவாசல் ஏற்படுத்தியிருக்கிறது.
Facebook Comments




