
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்ததை தொடர்ந்து 12 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் வீடுகளிலே முடங்கியுள்ளனர். இந்நிலையில், நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
ஆனால், இந்த தகவலில் உண்மை இல்லை என்று நயன்தாராவின் மக்கள் தொடர்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் இருந்து நயன்தாரா வீட்டில் தனிமையை கடைபிடித்து வருவதாகவும், விக்னேஷ் சிவன் குறும்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை தனது அலுவலகத்தில் இருந்தே கவனித்து வருவதாகவும் இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை எனவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.
Facebook Comments