Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

கொரோனாவை வென்ற நியூசிலாந்து… உலக நாடுகள் பாராட்டு!

கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நியூசிலாந்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

நியூசிலாந்து நாட்டில் கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களிலேயே அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக அங்கு வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுவரை அங்கு வைரஸ் காரணமாக 1,500பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதோடு அதில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் நேற்று ஊடகத்தினரிடம் பேசும்போது, கொரோனா தொற்றின் சமூகப் பரவலை முழுமையாக தடுத்து விட்டதாகவும் புதிய நோயாளிகள் யாரும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று காலை முதல் அங்கு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் தொழில் துறைகளும் இயங்கத் தொடங்கியுள்ளதோடு சில பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களும் உணவகங்களும் அங்கு திறக்கப்பட்டுள்ளன.

நியூசிலாந்து அரசின் இந்த வெற்றிக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்..

Facebook Comments

Related Articles

Back to top button