கர்நாடகாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக பெரும் முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ‘ காங்கிரஸ் எவ்வளவுதான் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தாலும், ஆளும் மாநிலத்தை இழந்துள்ளார்கள்.
ஆட்சி செய்த மாநிலத்தை இழந்த காங்கிரஸ், இனி வேறு எங்கும் ஆட்சியமைக்க முடியாது.” என்று கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடிக்கு இந்த வெற்றி சமர்ப்பணம் என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து பாஜக தொண்டர்கள் டெல்லி பாஜக அலுவலகம் முன் உற்சாக களிப்பில் இருக்கின்றனர்.
Facebook Comments