
எழுத்து & இயக்கம்: தினேஷ் கலைச்செல்வன்
நடிப்பு: விமல், சிருஷ்டி டாங்கே, யோகிபாபு , ஜான் விஜய், கபீர் துஹான் சிங், மஹிமா குப்தா, விஜய் சேயோன், அல்ஃப்ரெட் ஜோஸ், சுபாங்கி ஜா, சிவகிருஷ்ணா , இலக்கியா
தயாரிப்பு நிறுவனம்: மருதம் புரொடக்ஷன்ஸ்
இசை: ஏ.பிரவீன் குமார்
பின்னணி இசை – உதய் பிரகாஷ் UPR
ஒளிப்பதிவு: மனாஸ் பாபு D R
யாழி என்ற வனப்பகுதியின் உச்சியில் குரங்கணி என்ற பகுதியில் இருக்கும் மக்களுக்கும் மலை அடிவாரத்தில் இருக்கும் மக்களுக்கும் காலம் காலமாக மோதல் இருந்து வருகிறது. இந்த மக்களின் வழிபாட்டு தெய்வமான யாழி என்ற சிலையை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டி நிலவி வருகிறது.
இந்த மோதலை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறது ஒருவர். ஒரு கட்டத்தில் இரண்டு கிராம மக்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை படத்தின் மீதி கதை
எதார்த்த நடிகரான விமல், செங்குட்டுவன் என்ற கதாபாத்திரத்தில் அந்த கேரக்டராகவே மாறி தனது பங்கை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் இன்னும் சற்று மெடக்கடல் செய்திருக்கலாமோ என்ற எண்ணத்தையும் அவர் கொண்டு வந்து விட்டார்.
படத்தின் நாயகியான சிருஷ்டி டாங்கே சிரித்து தனது கண்ணக்குழியால் ரசிகர்களை கட்டி போடுகிறார். மேலும் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் இயல்பான நடிப்பை கொடுத்திருந்தனர். வழக்கம்போல் ஜான் விஜய் தனது கதாபாத்திரத்தை இரிடேட்டாகவே கொடுத்து நம்மளை கடுப்பேற்றி விடுகிறார்.
ஒரு சில காட்சிகள் என்றாலும் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார் யோகி பாபு.மகிமா குப்தாவின் நடிப்பு பாராட்டும்படியாக இருந்தது.
மலைப்பகுதி வாழ் மக்களின் வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்ததில் வென்றிருக்கிறார் இயக்குனர் கலைச்செல்வன். நரபலி விஷயத்தை இன்னும் பல படங்களில் சொல்லிக் கொண்டே இருப்பது சற்று சலிப்பை தட்டுகிறது. இருந்தாலும் இயக்குனர் எடுத்த இந்த முயற்சிக்கு பெரிதான ஒரு பாராட்டை நிச்சயம் கொடுக்கலாம்.
மலைப் பகுதியை காட்சிப்படுத்திய விதத்தில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பாபு நம்மை வியக்க வைத்திருக்கிறார். பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் உதவி பிரகாஷ் அதிரடி காட்டி இருக்கிறார்.
மகா சேனா – முயற்சி




