Spotlightசினிமா

ராணா, விஷ்ணு விஷால் பாராட்டை பெற்ற ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக்குமார் !!

 

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். இப்படத்தில் ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இறுக்கிறார். முதல் படமே ஒருவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு அமைவது கடினம். ஆனால் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது.

விவசாய குடும்பத்தில் பிறந்த ஏ.ஆர்.அசோக்குமார், ஒளிப்பதிவு மீது உள்ள ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருடன் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, தாண்டவம், சைவம், காவியத் தலைவன் ஆகிய படங்களுக்கு உதவியாளராக ஏ.ஆர்.அசோக்குமார் பணியாற்றி இருக்கிறார்.

மேலும், ஒளிப்பதிவாளர் சுகுமாருடன் தர்மதுரை, ஸ்கெட்ச், கும்கி 2 படங்களுக்கு உதவியாளராக ஏ.ஆர்.அசோக்குமார் பணியாற்றி இருக்கிறார். இப்படங்களில் அசோக்குமாரின் திறமையை பார்த்த இயக்குனர் பிரபு சாலமன், காடன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்.

இப்படம் குறித்து ஏ.ஆர்.அசோக்குமார் கூறும்போது, என்னை நம்பி காடன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வாய்ப்பை கொடுத்த இயக்குனர் பிரபு சாலமன் அவர்களுக்கும், ஈராஸ் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய நன்றிகள். முதல் படமே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி. நான் அறிமுக ஒளிப்பதிவாளர் என்று பார்க்காமல், நடிகர்கள் ராணா மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் என்னுடன் நட்பாக பழகியது என்னை ஆச்சரியப்படுத்தியது. மேலும் ராணா, விஷ்ணு விஷால் இருவரும் விரைவில் மீண்டும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்கள்.

காடன் படத்திற்காக தாய்லாந்து, புனே, கேரளா வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது சிறந்த அனுபவமாக இருந்தது. முழு படத்தையும் பார்த்த படக்குழுவினர், பொதுமக்கள் அனைவரும் என்னை பாராட்டியது சந்தோஷமாக இருந்தது. குறிப்பாக ராணா, விஷ்ணு விஷால், இயக்குனர் பிரபு சாலமன் ஆகியோர் பாராட்டில் மெய் சிலிர்த்து போனேன். இவர்களின் பாராட்டு இன்னும் உத்வேகத்துடன் பணியாற்ற உற்சாகப்படுத்தி இருக்கிறது.

தற்போது, சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் சீனு ராமசாமி சகோதரர் இயக்கத்தில் திண்டுக்கல் லியோனி மகன் நடிக்கும் புதிய படத்தில் அழகிய கண்ணே படத்தில் பணியாற்றி வருகிறேன் என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button