Spotlightசினிமா

நெல்சன் இயக்கத்தில் “தலைவர் 169”; உறுதி செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க வெளிவந்த திரைப்படம் ”பீஸ்ட்”. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் வெற்றி நடை போடுகிறது.

வெறும் 5 நாட்களில் மட்டும் சுமார் 200 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதால், தனது அடுத்த படமான ”தலைவர் 169” படம் ட்ராப் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீப்போல தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் 169 உறுதி என தனது profile பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “Back Ground”ல் “தலைவர் 169” பட அறிவிப்பு போட்டோவை நேற்று வைத்து, தலைவர் 169 நெல்சனோடு தான் என உறுதிபடுத்தியுள்ளார். இதன் மூலம் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தின் இயக்குனர் நெல்சன் தான் என்பதை உறுபடுத்தியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button