Spotlightசினிமா

தளபதிக்கு நன்றி தெரிவித்த லாரன்ஸ்… நடந்தது என்ன..??

டிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனக்கு தெரிந்த மாற்றுத்திறனாளி சிறுவர் ஒருவர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள “வாத்தி கம்மிங்” பாடலை வசித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அச்சிறுவனுக்கு அனிருத் இசையில், விஜய் முன்னால் பாட வாய்ப்பு வாங்கித் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை தற்போது தளபதி விஜய் மற்றும் அனிருத் ஏற்று கொண்டுள்ளனர். இது குறித்து நேற்று இரவு ‘தளபதி விஜய்’யிடம் ராகவா லாரன்ஸ் பேசிய போது ‘அந்த சிறுவனை ஊரடங்கு முடிந்த உடன் அழைத்து வரும்படியும் அந்த சிறுவனுக்கு கண்டிப்பாக அனிருத்தின் இசையில் பாட வாய்ப்பு வாங்கி தருவதாக விஜய் வாக்குறுதி அளித்துள்ளதாக ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஒரு ஏழை மாற்றுத்திறனாளி சிறுவனின் கனவு நனவாக போவதை அறிந்து நான் மிகுந்த சந்தோஷம் அடைந்ததாகவும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button