
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியானது ‘மெர்சல்’. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி சூப்பர் ஹிட்டானதுடன் வசூலிலும் சாதனை படைத்தது.
ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்த இந்த படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற 4வது இங்கிலாந்து தேசிய திரைப்பட விழாவில்,2018ம் ஆண்டுக்கான சிறந்த அயல்நாட்டு திரைப்படம் என்ற பிரிவில் ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்காகன பட்டியலில், பிரான்ஸ், ரஷ்யா, சிலி, தென் ஆப்ரிக்கா, சுவீடன், லெபனான், ஜெர்மனி நாட்டுப் படங்கள் இடம்பெற்றிருந்தன. எனினும் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட மெர்சல் படம் இந்த விருதை வென்றுள்ளது. இந்த விருது ரசிகர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விருது என்பது குறிப்பிடத்தக்கது.