ட்ராகன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரகு பாலன் தயாரிப்பில் மற்றும் மேனுவல் பெனிட்டோ ஒய்.ரோல்டன் இணைத்தயாரிப்பில் பாஸ்கர் இயக்கும் படம் “தன்னாலே வெளிவரும் தயங்காதே”.
இப்படத்தில் நாயகனாக ரகுபாலன் மற்றும் நாயகியாக ஆஷிக்கா நடித்துள்ளனர். இவர்களுடன் டி.பி.கஜேந்திரன், கிரேன் மனோகர் , மகாநதி சங்கர், ரஞ்சன், ஜெயசூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கதை – ஜோஷி சேவியர், இசை – சாதிக் ஹாசன்,ஒளிப்பதிவு – கொளஞ்சி குமார், கலை – டென்னிஸ் சிக்ஸ்டஸ், படத்தொகுப்பு – பிரேம், நடனம் – ரவி தேவ், சண்டைப்பயிற்சி – பம்மல் ரவி, நோபர்ட் எரிக், திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாஸ்கர். தயாரிப்பு – ரகுபாலன்.
இப்படத்தின் கதையைப்பற்றி இயக்குனர் கூறியதாவது, ” நான்கு உதவி இயக்குனர்கள் காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார்கள், அதே நேரம் அந்த காவல் துறையின் விசாரணையில் ஒவ்வொரு உதவி இயக்குனரும் ஒரு கதை சொல்கிறார்கள். இவர்கள் கூறும் கதை கடத்தப்பட்ட தம்பதியினரை கண்டுபிடிக்க உதவியாக இருக்கிறது. இந்த தம்பதிகள் ஏன் கடத்தப்பட்டார்கள்..? எதற்கு கடத்தப்பட்டார்கள்..? என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையாக கூறுவதே தன்னாலே வெளிவரும் தயங்காதே” என்று கூறியுள்ளார்.
இப்படத்தின் படபிடிப்பு சென்னை,கோவை, பாண்டிசேரி மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.