
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ‘தலைவி’ என்ற பெயரை வைத்துள்ளனர். ஜெயலலிதாவாக கங்கனா ரெணாவத் நடிக்கிறார்.
இப்படத்தை விஜய் இயக்கி வருகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். பல மொழிகளில் இப்படம் உருவாக இருக்கிறது. பாகுபலி படத்திற்கு திரைக்கதை செய்த விஜயேந்திரபிரசாத்தே இப்படத்திற்கும் திரைக்கதை எழுதுகிறார்.
இப்படத்தில், எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க அரவிந்தசாமி தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார். மீசையில்லாமல் எம்.ஜி.ஆர் போலவே இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஷ்ணு இந்தூரி, சைலேஷ் சிங் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
Facebook Comments





