தூத்துக்குடி : ஸ்டர்லைட் தொழிற்சாலை ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்து வருகிறது. இந்தநிலையில் அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் தொடங்கி நடடைபெற்று வந்த நிலையில் ஆலையின் விரிவாக்கத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் அருகே உள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 44வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார். குழந்தைகள், முதியவர்கள் என இரவிலும் போராட்டம் தொடர்கிறது.
பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் விரிவாக்கப்பணிகளுக்காக லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்வது, கான்க்ரீட் கால்வாய்கள் அமைப்பது, முட்செடிகளை அகற்றுவது என ஆலையின் விரிவாக்கப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஆனால், அதிகாரிகள் மக்களின் போராட்டத்தை துளியும் அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து விரிவாக்க பணிகளை செய்து வருவது மக்களிடையே மேலும் கோபத்தை அதிகரித்துள்ளது.