
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தூத்துக்குடி வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியிந் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை மக்களுடன் இணைந்து ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கடினமான பணி அல்ல, மத்திய அரசு நினைத்தால் அமைக்கலாம். என்றும் கமல் கூறியுள்ளார்.
காவிரி விவகாரத்தில், எம்.பி-க்கள் ராஜினாமா செய்தால் பாராட்டுவேன். காவிரிக்காக தற்கொலை செய்துகொள்வேன் என்பது அரசியல் பித்தலாட்டம் என்றும் கமல் கூறியுள்ளார்.
Facebook Comments