Spotlightவிமர்சனங்கள்

தூவல் – விமர்சனம் 2.75/5

பிழை என்ற படத்தின் இயக்குனரான ராஜவேல் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல், கிருஷ்ணா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் தூவல்.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் S.A. தர்வேஸ். இசையமைத்திருக்கிறார் படமா சதீஷ்.

படத்தொகுப்பை ராம் கோபி செய்திருக்கிறார். படத்தினை சைகர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

கதைக்குள் பயணிக்கலாம்…

ஆற்றங்கரை ஓரமாக ஓர் அழகிய கிராமம். அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் அந்த ஆற்றில் ஓடும் மீன்களை பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆற்றில் நீர் இல்லாத போது, காட்டிற்குள் இருக்கும் மிருகங்களை வேட்டையாடுகின்றனர். இந்த சூழலில், அக்கிராம மக்களின் அன்றாட தொழிலை கெடுக்கும் நோக்கில் வன காவல் அதிகாரி ராஜ்குமாரும் ரெளடியாக வரும் சிவமும் செயல்படுகின்றனர்.

இவர்களின் சுழலில் கிராம மக்கள் சிக்கினார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒரு கிராம மக்களின் ஆற்று மீன்பிடி வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா. இப்படியான ஆற்று மீன் பிடி தொழிலும் இருந்து கிராமமே அதை நம்பிய ஒரு வாழ்வாதாரத்தை கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது சினிமாவிற்கு புதிதான ஒன்று தான்.

அதிலும், அக்கிராமத்து வாசியாகவே வாழ்ந்த இளையாவின் நடிப்பு அட்டகாசமானது. காதலாக இருக்கட்டும், பிடிபட்ட மீனை காணவில்லை என்றதும் வெளிப்பட்ட கோபமாக இருக்கட்டும், கிராமத்திற்கு ஒன்று என்றதும் வரிந்து கட்டி நின்றதாக இருக்கட்டும் என பல இடங்களில் கிராமவாசியாகவே வாழ்ந்திருக்கிறார் இளையா.

வில்லனாக நடித்த சிவம் நடிப்பும் மிரள வைத்தது. படத்தினை சற்று கமர்ஷியலாக நகர்த்திச் சென்றிருந்தால் கூடுதலாக கவனிக்கும்படியாக இந்த தூவல் இருந்திருக்கும். ஒரு டாக்குமெண்டரி கதையாக படம் நகர்ந்து செல்வதால் சற்று பொறுமை இழந்துவிட்டது.

பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு ஓகே ரகம் தான். டாக்குமெண்ட்ரி பட விரும்பிகளுக்கு பிடித்தமான படைப்பாக தூவல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மொத்தத்தில்,

தூவல் – வாழ்வியல்

Facebook Comments

Related Articles

Back to top button